Sunday, October 10, 2010

அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.

அநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்.


ஷம்சுல் லுஹா (ரஹ்மானி)

ஆசிரியர் ஏகத்துவம் மாத இதழ்



இஸ்லாம் என்றால் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களில் ஈடுபடுவது மட்டும்தான் என்று பல எண்ணிக்கொண்டிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­லேயே தன் வாழ்கை கழித்தார்கள். உலக விஷயங்களைப்பற்றி நபிகளார் கவனத்தில் கொள்ளவில்லை, தொழுவதும் நோன்பு நோற்பதும்தான் அவர்களின் கடமையாக இருந்தது என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எண்ணும் வண்ணம் பல அறிஞர்களின் சொற்பொழிவுகளும் அமைந்திருக்கிறது.

வணக்க வழிபாடுகளை விட்டு விட்டு அரசியல் விஷயங்களில் ஈடுபட்டால் அது ஆன்மீகத்திற்கு எதிரானது என்றும் அநீததற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்றும் எண்ணுகின்றனர்.
இவ்வாறு செய்பவர்களை காணும் பெற்றோர்கள், நீ உண்டு உன் தொழுகை உண்டு என்று இருக்க வேண்டியதுதானே என்று கண்டிப்பதைக் காண்கிறோம்.


ஆனால், உண்மையில் இஸ்லாம் அனைத்து துறைகளிலும் ஈடுபடவேண்டும் என்றும் அவ்வாறு செய்வதினால் மறுமையில் கூ­லி உண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

மார்க்க விஷயமாக இருந்தாலும் சரி, உலகவிஷயமாக இருந்தாலும் சரி, அநியாயம் நடக்கும்போதும் நீததற்கு மாற்றமாக காரியங்கள் நிகழும் போது அதை தட்டிக் கேட்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

இவ்வாறு தீமையை தட்டிக் கேட்போர் நல்லடியார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.


அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர். (அல்குர்ஆன் 3:114)



தீமைக்கு எதிராக போராடும் ஒரு கூட்டத்தினர் இவ்வுலுகில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றும் இவர்கள் வெற்றியாளர்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.



நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104)



இவ்வசனம், தீமைக்கு எதிரான போராட்டம் மறுமைக்கு வெற்றித் தேடித் தரும் காரியம் என்பதை மிகத் தெளிவாக கூறுகிறது. நபி (ஸல்) அவர்களும் கூட தீமையைக் கண்டவர் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டியுள்ளார்கள்.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்­ரித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ர­லி), நூல்கள் :


முஸ்­லிம் (78),திர்மிதீ (2098), நஸயீ(4922), அபூதாவூத் (963),இப்னுமாஜா (1265), அஹ்மத் (10651)

இறைநம்பிக்கை உள்ளவர்கள் தீமை காணும் போது நாவால் அதை தடுக்க சக்தியிருந்தால் அதை தடுக்க வேண்டும் என்ற நபிமொழியை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசியல்வாதிகள் தீமைகளைச் செய்தால் இதற்கும் நமக்கும் என்ன தொடர்பு?

இது அரசியல், அதில் போய் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று நினைப்பவர்கள் பின்வரும் நபிமொழியை படிக்கட்டும்.

எந்த ஜிஹாத் சிறந்தது? என்று ஒரு மனிதர் கேட்டார்? அதற்கு நபி (ஸல்) அவர்கள் அநியாயம் செய்யும் மன்னர் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதுதான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப்(ரலி­),
நூல்கள் :நஸயீ (4138), அஹ்மத் (18076)

ஆட்சியாளர்கள் நியாயத்திற்கு எதிராக நடக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதை தட்டிக் கேட்பவர்கள் சிறந்த ஜிஹாதை (அறப்போரை) செய்தவர்களாக கருதப்படுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் சத்தியம் என்று தெரிந்த ஒன்றை ஆட்சியாளர் என்பதற்காக சொல்லாமல் இருக்கக்கூடாது. நியாயத்தை எங்கிருந்தாலும் சொல்லும் தைரியம் நமக்கு இருக்க வேண்டும்.

நாங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் விஷயத்தில் பழிப்பவர்கüன் பழிப்புரைக்கு அஞ்சாமல் 'உண்மையே பேசுவோம்' என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உறுதிமொழி அüத்தோம். (நூல் :புகாரி 7199)

முஸ்­லிம்கள் தொழுமிடமாக பயன்படுத்தி வந்த பாபர் பள்ளிவாசலை 1992 டிசம்பர் 6 அன்று அநியாயமாக ஒரு கும்பல் இடித்து தள்ளியது.அதை அன்றைய அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. முஸ்­லிம்களின் எதிர்ப்பை காட்டிய போது அதே இடத்தில் பள்ளிவாசல் கட்டித் தருவோம் என்றும் வாக்குறுதி வழங்கிவிட்டு இன்று வரையிலும் பள்ளிவாசல் கட்டித் தரவில்லை.
இந்த அநியாயத்தை கண்டிப்பதும் ஆட்சியாளர்களிடம் உரிமையை பெற்றுத்தர போராடுவதும் மார்க்கம் அங்கீகரித்த, நன்மையை பெற்றுத்தரும் நற்செயலாகும் என்பதை கவனத்தில் கொண்டு இது போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு ஈருலுக நன்மையைப் பெறுவோம்.


Thanks : http://www.rasminmisc.blogspot.com/

1 comment:

  1. Assalamu Alaikum,
    Superb article by Aalim Shamsulluha Rahmani. We should do good deeds and also stop others from doing wrong deeds. Hats of to TNTJ for not fearing anyone but Allah & doing their duty just to get His rewards.

    ReplyDelete